மனைவிக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் ஹீரோ.. சமரசத்திற்கு வரும் சீனியர் நடிகை

பிரபல ஹீரோ தன் மனைவியை பிரிந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சில மாதங்களாகவே இப்படி ஒரு செய்தி வெளிவந்தது. ஆனால் நிச்சயம் அது உண்மையாக இருக்காது என ரசிகர்கள் நினைத்தனர்.

அதற்கு மாறாக நடிகர் திடீரென அறிவிப்பை வெளியிட்டது அனைவரையும் அதிர்ச்சியுற செய்துள்ளது. அதை தொடர்ந்து அவரின் மனைவி போட்ட குண்டு தான் இப்போது சோஷியல் மீடியாவை கிடுகிடுக்க வைத்துள்ளது.

இதனால் நடிகர் பக்கம் என்ன தவறு இருக்கும் என பலரும் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். அதில் நடிகர் கடந்த சில மாதங்களாக வீட்டில் தங்குவதே கிடையாது என அதிர வைக்கும் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

எங்கு போகிறார் வருகிறார் என குடும்பத்தினருக்கே தெரியவில்லையாம். இதில் இன்னொரு நடிகையும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூட பேசிக் கொள்கின்றனர். தற்போது மனைவி எடுத்திருக்கும் இந்த அதிரடி முடிவால் நடிகர் தலைமறைவாகிவிட்டாராம்.

அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் சீனியர் நடிகை ஒருவர் சமரசம் செய்யலாம் என்கின்றனர். ஏனென்றால் இந்த ஜோடியின் திருமணத்திற்கு அவர்தான் காரணமாம். அதனால் எப்படியும் சமாதானம் செய்து இந்த ஜோடியை சேர்த்து வைத்து விடுவார் என கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.