செம்பருத்தி சீரியலில் நடிக்கும் கார்த்திக் ராஜ்க்கு ஜோடியாக ரம்யா பாண்டியன்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

சின்னத்திரை தொலைக்காட்சிகள் டி ஆர் பி இல் முதலிடத்தை பிடிக்க பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன அந்த வகையில் சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சி இரண்டிற்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியை எப்படியாவது டி ஆர் பி இல் முதலிடம் பிடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டே இருக்கிறது விஜய் தொலைக்காட்சி, இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி படத்தின் பெயர்களை தாங்கள் ஒளிபரப்பும் சீரியலுக்கு டைட்டிலாக வைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் செம்பருத்தி சீரியலும் லிஸ்டில் இருக்கிறது இந்த சீரியலுக்கு பல ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம் அந்தளவுக்கு சீரியலை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் இந்த நிலையில் செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் கார்த்திக் ராஜ்.

இவர் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார், முகிலன் என்ற வெப்  சீரியஸ் தொடரில் ஹீரோவாக நடித்து வரும் கார்த்திக் ராஜ் அவர்களுக்கு ஹீரோயினாக ரம்யா பாண்டியன் நடிக்க இருக்கிறார், இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் குக் வித கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார், இந்த நிலையில் கார்த்திக் ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன, கார்த்திக் ராஜ் நடிக்கும் சீரியலுக்கு ரசிகர் கூட்டம் ஏராளம் ஏனென்றால் அந்த அளவு பெண்களை வெகுவாக கவர்ந்து விடுவார்.

அந்த வகையில் அவருடன் இணைந்து ரம்ய பண்டியன் நடிப்பதால் இந்த வெப் சீரியஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

karthik raj
karthik raj

Leave a Comment