செல்வராகவன் ஒரு ஜீனியஸ் என்பது அவருடைய படங்களை வைத்து சொல்லலாம். அவருடைய எல்லா படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆனால் சமீப காலமாக அவர் இயக்கும் படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனாலயே அவர் நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பி உள்ளார். இது ஒரு புறம் இருக்க அவருடைய சோசியல் மீடியா பதிவு அவ்வப்போது குழப்பத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கும்.
அப்படித்தான் சமீப காலமாக அவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய போவதாக ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் அவருடைய மனைவி கீதாஞ்சலி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கி இருக்கிறார்.
ஆனாலும் இருவரும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் இது வெறும் வதந்தி தான். நிச்சயம் இவர்கள் பிரிய மாட்டார்கள் என பேசப்பட்டு வந்தது.
இப்போது பார்த்தால் செல்வராகவன் போட்டிருக்கும் ஒரு பதிவு இந்த செய்தி உண்மை தானோ என நினைக்க வைத்திருக்கிறது. அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் உங்களுக்கு துரோகம் செய்வது நன்றாய் தெரியும்.
நீ எல்லாம் கடவுளா உனக்கு எவ்வளவு பூஜை செய்தேன் என பிதற்றுவீர்கள். ஆனால் அமைதியாய் இருங்கள் சில காலம் தான் அனைத்தும் சரியாகிவிடும் என பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் அவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இன்னும் சிலர் அவருக்கு எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் வார்த்தை கூறி வருகின்றனர்.