மீண்டும் களத்தில் குதித்த செல்வராகவன்.! இதோ அவரே அறிவித்த அடுத்த படத்தின் அறிவிப்பு.!

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பல தரமான திரைப்படங்களை கொடுத்துள்ளார்.இவர் இயக்கிய சில திரைப்படங்கள் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

ஆனாலும் செல்வராகவன் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எப்போதும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும்.இந்த நிலையில் செல்வராகவன் அடுத்ததாக தனுஷை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என பலரும் கூறி வந்த நிலையில். தனுஷ் இன்னும் ஐந்து வருடங்களுக்கு படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதனால் தனுஷ் அடுத்ததாக செல்வராகவன் திரைப்படத்தில் நடிக்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

தனுஷ் ராட்சசன் இயக்குனர், மாரி செல்வராஜ் திரைப்படம், கார்த்திக் நரேன் படம் ஹிந்தியில் ஒரு திரைப்படம் என படு பிசியாக இருக்கிறார்.இப்படியிருக்க செல்வராகவன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் இது ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.

செல்வராகவன் பதிவிட்டுள்ளது என்னவென்றால். அவர் அடுத்த திரைப்படத்திற்கான கதையை எழுதுவது போல் குறிப்பிட்டுள்ளார். ஆனால் செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படமும் சந்தானத்தை வைத்து இயக்கிய மன்னவன் வந்தானடி திரைப்படமும் என்ன ஆனது என்று தெரியவில்லை.

ஆனால் செல்வராகவன் அடுத்த திரைப்படத்தை இயக்க ரெடியாகி விட்டார் என்பது மட்டும் தெரிகிறது. இதோ அவர் பதிவிட்ட தொகுப்பு.

Leave a Comment