செல்வராகவன் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்.!

0
selvaragavan
selvaragavan

இயக்குனர் செல்வராகவன் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும், இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதை கொண்ட திரைப்படமாகும், அதேபோல் நடிகர் தனுஷ் இயக்குனர்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அப்படிதான் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்திலிருந்து மீண்டும் அவரின் இயக்கத்திலேயே அசுரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு ராயன் என பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது, செல்வராகவன் இயக்கும் இந்த திரைப்படத்தில் கலை இயக்குனராக விஜய் முருகன் இணைய இருக்கிறாராம். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த தங்க மகன் சூர்யா நடித்த என் ஜி கே திரைப்படத்தில் பணியாற்றியவர். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

director
director