எங்களை மட்டும் அணியிலிருந்து ஈஸியா தூக்கிட்டிங்க.! இப்ப மட்டும் என்ன ஷேவாக் அதிரடி பேட்டி

0
sehwag
sehwag

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் மோதி தோற்றது, அதனால் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது, இதில் தோற்றத்தில் ஏராளமான பிரச்சினைகள் இருப்பதாக கூறி வருகிறார்கள் பலர்.

இதுதான் சரியான நேரம் என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அவரவர்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள், அது மட்டுமல்லாமல் சில முன்னாள் வீரர்கள் தங்களது ஆதங்கத்தையும் கூறிவருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சமீபத்தில் பிரபல தொலைகாட்சிக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார்.

அதில் அவர் கூறியதாவது முன்பெல்லாம் அணி வீரர்களை கேட்டு தான் அவர்களை நீக்குவார்கள், ஆனால் நாங்கள் விளையாடும் சமயத்தில் அது போல் கிடையாது, எங்களை அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணித்து பின்பு நீக்கிவிடுவார்கள். 2007க்கு பிறகு இதுபோல் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை, இப்பொழுது மட்டும் ஏன் மூத்த வீரர்களை தூக்குவதற்கு யோசிக்கிறார்கள்.

இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் உடனடியாக நாம் துணிந்து சில முடிவுகளை எடுத்து தான் ஆக வேண்டும் வேறு வழியே கிடையாது. அது மட்டுமில்லாமல் சச்சின், சேவாக், டிராவிட், கங்குலி என பல முன்னணி வீரர்களின் வாய்ப்பை பறித்தது தோனிதான் என ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது.