நான் அஜித் மாதிரி ஒரு ஆளை தான் கட்டிப்பேன்.! பிரபல இளம் நடிகை ஒரே போடு.

நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார், அஜீத் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என பலரும் கூறுகிறார்கள். இந்த நிலையில் வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்றும் வில்லன் யார் என்றும் இதுவரை வெளியாகாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.

அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது அதேபோல் சினிமா பிரபலங்களும் அஜித் ரசிகர்கள் ஆவார்கள், சினிமா பிரபலங்களை பேட்டி எடுக்கும்போது அஜித்தை பற்றி பல பிரபலங்கள் கூறியுள்ளார்கள். அதை நாம் அனைவரும் பார்த்துள்ளோம், அந்தவகையில் இந்த வாரம் ஜீவா நடிப்பில் வெளியாகி சீறு திரைப்படத்தில் நாயகியாக ரியா சுமனும் அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அந்த பேட்டியில் அவரிடம் உங்களுக்கு நடிகர்களில் யாரைப் போல் மாப்பிள்ளை வேண்டும் என கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு சற்றும் யோசிக்காமல் அஜித்தை போல் ஒருவர் தான் திருமணம் செய்து கொள்ள ஆசை என கூறியுள்ளார்.

பல நடிகைகள் பல பேட்டிகளில் அஜித்தை போல் மாப்பிள்ளை வேணும் என கூறியுள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் அதேபோல் இந்த நடிகையும் கூறியுள்ளார். ஏனென்றால் அஜித் பெண்களை மதிப்பவர். பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் அஜித்தை பல பெண்களுக்கு பிடிக்கிறது.

Riya-Suman-Seeru
Riya-Suman-Seeru

Leave a Comment