விஜய் சேதுபதி நடிகையை தட்டி தூக்கிய ஜிவி பிரகாஷ்.! லக்கா மாடிகிச்சி லக்கா மாட்டிகிச்சி கிக்கான பிகரு.!

தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்து  தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் குசேலன், நான் ராஜாவாக போகிறேன், தலைவா, போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், கடவுள் இருக்கான் குமாரு, குப்பத்து ராஜா, சிவப்பு மஞ்சள் பச்சை, 100 சதவீத காதல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை இயக்குனரான சீனு ராமசாமி அவர்கள் இயக்க உள்ளார்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு முதல் முதலாக ஜோடியாக போகும் நடிகை காயத்ரி அவர்கள் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நடிகரும் மற்றும் வில்லனுமான விஜய் சேதுபதி அவர்கள் நடிக்க உள்ளார் என்ற தகவலும் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிகராக தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார்.

விஜய் சேதுபதியுடன் ஒரு சில திரைப்படங்களில் கைகோர்த்து  நடித்தவர் தான் நடிகை காயத்ரி இவர் நடித்த திரைப்படங்கள் என்னவென்றால் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்,புரியாத புதிர்,மாமனிதன், சூப்பர் டீலக்ஸ்,போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment