விடுதலை திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சீமான் கொடுத்த விமர்சனம்.! சூப்பரா.. சுமாரா..

இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதியை வைத்து எடுத்த திரைப்படம் விடுதலை. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் முழுக்க முழுக்க மலைவாழ் மக்கள் வாழ்ந்தவரும் இடத்தை சுரங்கப்பாதை கொண்ட அரசாங்கம் முடிவெடுக்கிறது.

அரசாங்கத்தை எதிர்த்து பெருமாள் வாத்தியார் என்கின்ற விஜய் சேதுபதி தலைமையில் மக்கள் படை ஒன்று உருவாகி  எதிர்த்து சண்டை போடுகிறது இதில் கடைசியில் என்ன ஆனது என்பது தான் விடுதலை படம்.. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சூப்பராக இருக்கிறது இந்த படத்தை சின்ன குழந்தைகள் தொடங்கி பெரியவர் வரை பலரும் கண்டு களித்து தொடர்ந்து பாசிட்டி விமர்சனங்கள் வருவதால் விடுதலை திரைப்படம்..

நிச்சயம் மிகப்பெரிய ஒரு சாதனை படைக்கும் என இப்பொழுதே கூறிப்படுகிறது. இந்த நிலையில் விடுதலை படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த தமிழர் கட்சி சீமான் பேசியது என்னவென்றால்.. பார்த்துவிட்டு வெளியே வந்த சீமான் சிறிது நேரம் கண்கலங்கி பேச முடியாமல் இருந்தார் அதனைத் தொடர்ந்து சீமான் மிகவும் பெருமிதத்தோடு வெற்றிமாறனை பற்றி பேசினார்.

ஒரு ஆங்கில படம் அளவிற்கு படத்தை அற்புதமாக எடுத்திருப்பதாக கூறினார் மேலும் நிருபர் ஒருவர் இந்த படத்தில் எங்கேயாவது அதிகார வர்க்கம், போலீஸ் கொடுமைக்கு ஆளாகும் மக்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகமைப்படுத்தப்பட்டு  காண்பிக்கப் பட்டதா என நினைக்கிறீர்களா? கேட்டார் அதற்கு பதில் அளித்த சீமான் அப்படியெல்லாம் இல்ல எதார்த்தத்தில் என்ன நடக்கிறதோ அதைத்தான் இந்த படம் சொல்கிறது.

காலம் காலமாக கனிம வளங்களை சுரண்டி மக்களை வாழவிடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை  எதிர்த்து தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் மேலும் தீர்த்து போகும் வளங்களை மட்டுமே சுரண்டுகின்றனர் தீராத பலங்கள் எவ்வளவு உயிருக்கு 6 வழி சாலை 4 வழிச்சாலைகளாக நாம் கேட்கிறோம் வளங்களை திருடிக் கொண்டு போகும் முதலாளிக்காக அந்த சாலை போடுகின்றனர்.

இதை எல்லாவற்றையும் தான் இந்த படம் சொல்ல வருகிறது என ஆவேசமாக பேசினார் மேலும் நேற்று பத்து தலை படம் திரையிடப்பட்ட ரோகிணி திரையரங்கில் தீண்டாமை கொடுமை சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு நடந்துள்ளது அது பற்றி கேட்ட பொழுது யாரெல்லாம் கண்டனம் தெரிவிக்கின்றனர்   முதலில் அந்த தியேட்டரை இழுத்து மூடுங்க என கோபத்துடன் பேசினார்.

Leave a Comment