தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது தனது 66-வது திரைபடமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக தளபதி விஜய் நடித்து வருகிறார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது இது இப்படி இருக்க விஜயை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் விஜய்க்கு ஒரு சூப்பரான கதையை தயார் செய்து உள்ளதாக கூறப்படுகிறது அந்த படத்திற்கு பகலவன் என பெயர் வைக்கப்பட்டிருந்ததாம்.
சீமான் விஜய்க்கு இந்த கதையை கூறுவது நடக்காத காரியம் என்பதால் சீமான் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகும் என சில மாதங்களுக்கு முன்பு கூட கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அந்த கதையை வேறு ஒரு இயக்குனர் எழுதி படமாகவே எடுத்துவிட்டார் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது. அந்த இயக்குனர் வேறு யாரும் அல்ல லிங்குசாமி தான்.
லிங்குசாமி சமீபத்தில் ராம் போதேனியை வைத்து வாரியர் என்னும் திரைப்படத்தை எடுத்திருந்தார். ஒரு மருத்துவர் சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களை பொறுக்க முடியாமல் தான் போலீசாக மாறி குற்றவாளிகளை தண்டிப்பது தான் பகலவன் படத்தின் கதையும் அதே கதையை வைத்து தான் லிங்குசாமி தற்போது வாரியார் படத்தை எடுத்துள்ளார். இதனால் சீமான் தனது நெருங்கிய வட்டாரத்தில் கூறி தற்பொழுது புளம்பி வருகிறாராம்.
இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் நல்ல வேலை சிம்புவும் நடிக்கல.. விஜயும் நடிக்கல நடித்திருந்தால் அவ்வளவுதான் எனக் கூறி பெருமூச்சு விட்டு வருகின்றனர். சீமான் சொன்ன கதையை லிங்குசாமி எடுத்துவிட்டார் என கூறப்படுகிறது ஆனால் லிங்குசாமி இந்த படத்தின் கதையை இப்போது எழுதவில்லை அஞ்சான் படத்திற்கு முன்பாகவே இந்த படத்தின் கதையை அவர் எழுதியிருந்தாராம்.
சூர்யாவிடம் முதலில் வாரியார் படத்தின் கதையை கூறியுள்ளார் அவருக்கு அது பிடிக்காமல் போகவே வேறு கதை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார் அதன் பிறகு தான் அஞ்சான் படத்தின் கதையை கூறி அது படமாக எடுக்கப்பட்டதாக தெரிவித்தார் ஆனால் வாரியார் படத்தின் கதையை இப்பொழுதுஉருவாக்கி விட்டேன் ஆனால் தற்பொழுது தான் அது படமாக எடுக்கப்பட்டதாகவும் சொல்லி உள்ளார்.