பீஸ்ட் படத்தின் நாயகி “பூஜா ஹெக்டே”எப்படியெல்லாம் ஒர்க்கவுட் செய்கிறார் பாருங்கள்.! அசந்து போக வைக்கும் சூப்பர் வீடியோ.

0

தமிழ் சினிமா சிறப்பான படைப்புகளை கொடுத்து வரும் மிஷ்கின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முகமூடி. ஜீவா ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக பூஜா ஹெக்டே அறிமுகமானார்.  தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா ஹெக்டே இந்த படத்தில் இணைந்தது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக அமைந்தது.

ஆனால் படத்தின் கதை சரியாக இல்லாததால் படம் தோல்வியை தழுவியது இருப்பினும் பூஜாவின் நடிப்பு இந்த படத்தில் ஓரளவு கை கொடுத்தது அதன்பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. தமிழுக்கு வராமல் இருந்து வந்த இவர் தற்போது பல வருடங்கள் கழித்து தளபதி விஜயுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

முதல்கட்ட மட்டும் இரண்டாம் கட்ட சூட்டிங்கை சிறப்பாக முடித்து விட்ட பூஜா ஹெக்டே  தற்போது மும்பையில் இருந்து மற்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழை தாண்டி தற்போது பல டாப் நடிகர்களை நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதால் தற்போது தென்னிந்திய சினிமாவில் அசுர வளர்ச்சி ஏற்றிய நடிகைகளில் ஒருவராக பூஜாவுக்கு இருந்து வருகிறார்.

மேலும் தமிழ் சினிமாவில் பீஸ்ட் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்து விட்டால் வெகு விரைவிலேயே சமந்தா, நயன்தாரா ஆகியோரை பின்னுக்குத் தள்ளிமுதல் இடத்தை பிடிப்பார் என தற்போது தகவல்கள் கசிகின்றன. இந்த நிலைல் சினிமா உலகில் நிலைத்து நிற்க எப்பொழுதும் ஸ்லிம்மான உடம்பு இருக்க வேண்டும் என்பதை சரியாக புரிந்து கொண்டு தனது உடம்பை கட்டு கோப்பாக வைத்து வருகிறார் பூஜா ஹெக்டே.

அதுபோல தற்போது இவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளி வருகிறது. இதோ அவர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ.