40 வருஷத்திற்கு முன்னாடி ராதிகா எப்படி இருகாங்க பாருங்க.! சூப்பர் ஸ்டார் உடன் இருக்கும் புகைப்படம் இதோ.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “கிழக்கே போகும் ரயில்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை மேற்கொண்டவர் நடிகை ராதிகா. முதல்படமே அதிரிபுதிரி ஹிட் அடித்ததால் நடித்தவர்கள் பெயரும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டனர்.

மேலும் இந்த படத்தில் ராதிகாவின் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் பிரபலம் அடைந்தார். மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கின சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததால் வெகுவிரைவிலேயேமுன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றதோடு தமிழையும் தாண்டி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவர் சிறப்பாக பயணிக்கத் தொடங்கினார்.

இளம் வயதிலேயே சினிமா பக்கம் வந்த ராதிகா அப்போதிலிருந்து தற்போது வரையிலும் ஏதாவது ஒரு ரோலில் சிறப்பாக நடித்து பாராட்டைப் பெற்று வருகிறார். தமிழ் சினிமாவில் எப்படி நம்ம ரஜினி நம்பர் 1 அதுபோல தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் நடிகை ராதிகா நடித்துள்ளார்.

40 ஆண்டுகள் கழித்து ராதிகா சிரஞ்சீவியுடன் இருக்கும் புகைப்படத்தையும் தற்பொழுது பகிர்ந்துள்ளார். ராதிகாவும், சிரஞ்சீவியும் இணைந்து 1981 ஆம் ஆண்டு நியாயம் காவாலி என்ற திரைப்படத்தில் நடித்தனர். அந்த புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பதிவை பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது ராதிகா “எனது நீண்ட கால நண்பன்” பதிவு செய்தார்.

இந்த புகைப்படம் தற்போது அதிக அளவில் பகிரபடுவதொடு, லைக்குகளை அள்ளியும் வருகிறது.

Leave a Comment