இயக்குனராக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக மாறிய திரை பிரபலங்கள்.!

இயக்குனராக திரையுல இருக்கு அறிமுகம் ஆகி பின்னர் எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்க முடியாமல் நடிகர்களாக மாறிய திரை பிரபலங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

எஸ் ஜே சூர்யா :- இயக்குனராக குஷி, வாலி போன்ற திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார். தற்போது திரையுலகில் வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.

அமீர் சுல்தான் ;-  இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் இயக்குனர் அமீர் சுல்தான். அதன் பின்னர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இவர் மாறன், வடசென்னை, ஆதி பகவன்  ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் வட சென்னை திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ஆகும்.

சேரன் :- திரைக்கதை ஆசிரியராக திரையுலகிற்கு அறிமுகம் ஆகிய பின்னர் இயக்குனராக திரைப்படங்களை இயக்கி ஐந்து தேசிய விருதுகளை வென்று உள்ளார் இயக்குனர் சேரன் அவர்கள். பின்னர் இவர் இயக்கிய ஆட்டோகிராப் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து நடிகராகவும் அறிமுகமானார். தற்போது இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமுத்திரகனி :- சமூகத்தை மையப்படுத்தி திரைக்கதையை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் திரைக்கதையை உருவாக்கி இயக்கி வெற்றி கண்டுள்ள இயக்குனர் தான் சமுத்திரகனி. இவர் இயக்கிய நாடோடிகள் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் தற்போது குணச்சித்திர வேடங்கள் வில்லன் நாயகன் என அனைத்து கதாபாத்திரத்திலும் புகுந்து விளையாடுகிறார்.

விஜய்குமார் :- நடிகரும் இயக்குனரும் ஆன விஜய் குமார் அவர்கள் உரியடி என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து அறிமுகமான இத்திரைப்படத்தின் வெற்றியின் வாயிலாக திரையுலையிலும் பிரபலமானார்.

சசிகுமார்:- சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தை இயக்கிய நடித்து பிரபலமானவர் தான் சசிகுமார். தற்போது இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் ஏதேனும் ஒரு சமூக கருத்துக்கள் மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையை சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை உள்ளடக்கி அந்தத் திரைக்கதையில் நடித்து வருகிறார்.

சுந்தர் சி:- குடும்ப கதை என குடும்பங்களை கவரும் வகையில் திரைகதையை வடிவமைத்து திரையுலகில் பிரபலமானவர் இயக்குனர் சுந்தர் சி. இவர் இயக்கிய பல திரைப்படங்களில் இவரே நடித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் :- இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ராஜ்குமார் சந்தோஷி மற்றும் நிஷிலானி போன்ற ஹிந்தி திரைப்பட இயக்குனர்களுடனும் உதவி இயக்குனராக பணி செய்துள்ளார். கற்றது தமிழ் என்ற திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அதன் பிறகு தங்க மீன்கள் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார் இந்த திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழா மற்றும் குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாக்களில் தங்க நீங்கள் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

மேலும் பார்த்திபன், கே பாக்யராஜ், நவீன், மிஷ்கின், தருண் கோபி ஆகியோர் இயக்குனர்களாக இருந்து நடிகராக மாறியபிரபலங்கள்.

Leave a Comment