பள்ளி மாணவர்களுக்கு ஒரு உற்சாக செய்தி..! பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அதிரடி முடிவு..!

school students latest news: சமீபத்தில் கரோனாவின் தாக்கம் அதிகமானதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்காமல் மூடியே கிடக்கிறது.  இதனால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்பு நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை சுமார் 40% குறைத்து பாட திட்டங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது மேலும் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு குறிப்பிட்ட பாட பகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு கொடுக்கப்படும் ஆன்லைன் வகுபானது தற்போது தொலைக்காட்சி மூலமாகவும் மொபைல் போன் மூலமாகவும் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் பள்ளி திறப்பு தாமதம் ஆவதன் காரணமாக தற்போது 40 சதவிகிதம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 50 சதவீதமாக குறைக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இவ்வாறு 50 சதவீதம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டால் மாணவர்கள் கற்பித்தல் குறைவாகும். அதுமட்டுமில்லாமல் இதற்கு முக்கிய காரணமே ஆன்லைனில் போதிய அளவு மாணவர்களுக்கு பாடத்தை கற்றுக் கொடுக்க முடியதது தான்.

ஆகையால் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடியிடம் ஒப்புதல் வாங்கபோவதாகவும் அதன் பின்னர் இந்த அறிக்கையை அதிக பூர்வமாக வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு அரசல் புரசலாக வெளி வந்த செய்தியால் மாணவர்கள் சந்தோசத்துடனும் இருந்து வருகிறார்கள்.

Leave a Comment