இப்படியும் ஒரு மாணவனா.! நேர்மையாக லீவு லெட்டர் எழுதிய மாணவன் குவியும் பாராட்டுகள்.

0

திருவாரூர் மாவட்டம் மேல ராதா நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேர்மையாக உண்மையை சொல்லி லீவு லெட்டர் எழுதிய மாணவனுக்கு சமூகவலைதளத்தில் பாராட்டு மழை குவிந்து வருகிறது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேல ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது, இங்கு தீபக் என்ற மாணவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார், இவரின் தந்தை விஜயராகவன் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்,

இந்த மாணவன் பள்ளியில் சிறந்த மாணவனாக ஆசிரியர்கள் மத்திய நல்ல மாணவனாகவும் பெயர் எடுத்துள்ளார். கம்பத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 90 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளார், இதனாலேயே தீபக் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு விடுமுறை எடுத்து உள்ளார், இதற்காக அந்த மாணவனுக்கு வகுப்பு ஆசிரியருக்கு அனுப்பி உள்ள விடுப்பு கடிதத்தில் தான் ஏற்று ஊரில் நடந்த கபடி போட்டி யிடுவது முழுவதும் கண் விழித்து பார்த்தேன் உடல் சோர்வாக உள்ளது எனவே எனக்கு ஒரு நாள் விடுப்பு வேண்டும் என கூறியுள்ளார்..

school
school

அதனை அடுத்து பள்ளி மாணவனுக்கு பள்ளி ஆசிரியர் விடுப்பு கொடுத்துள்ளார், வகுப்பாசிரியர் மணிமாறன் மாணவனை பாராட்டி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்த பதிவை படித்த பலரும் மாணவனை பாராட்டி வருகிறார்கள்.