பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை பற்றிய முக்கிய அறிவிப்பு.! வேகமெடுக்கும் கொரோனா மற்றும் ஒமைக்கிரான்.! அமைச்சர் அதிரடி பேட்டி.

கடந்த இரண்டு வருடங்களாகவே உலக நாடுகளையே உலுக்கி எடுத்தது கொரோனா ஆனால் இன்னும் ஓய்ந்தபாடில்லை. கொரோனா ஓய்ந்த நிலையில் மக்கள் பலரும் நடமாட ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களின் நிம்மதியை கெடுக்கும் வகையில் மீண்டும் கொரானா வேகம் எடுத்துள்ளது அதுமட்டுமில்லாமல் ஒமைக்கிரான் அதி வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகிறது அந்தந்த அரசு.  அதுமட்டுமில்லாமல் சில மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒமைகிரான் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

கொரனோ மற்றும் ஒமைக்கிறான் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த  ஆலோசனைக்குப் பிறகு சுகாதாரதுறை அமைச்சர் சில கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.  அதில் அவர் கூறியதாவது கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் எனவும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை கொரோனோ தடுப்பூசி முகாம் செயல்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்த ஊர் அடங்கில் அத்தியாவசிய பணிகள் மட்டுமே நடைபெறும் அதற்கு மட்டுமே அனுமதி உண்டு எனவும்  அறிவித்துள்ளார். மேலும் இன்னும் சில கட்டுப்பாடுகளுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது இதன் படி இன்று முதல் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை, அதே போல் அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு. பொது போக்குவரத்து இயங்காது மெட்ரோ ரயில் பஸ் போக்குவரத்து தடை. அதே போல் அனைத்து கடைகளும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி.

மேலும் பேருந்துகள் புறநகர் ரயில்கள் என அனைத்திலும் 50 சதவிகித இருக்கைகளுடன் பயணிகள் செல்ல அனுமதி. மேலும் அனைத்து கல்வி நிலையங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும். அதேபோல் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நேரடி வகுப்புக்கு தடை. ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடு.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படும் மற்ற கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை. மேலும் பொருட்காட்சி, புத்தகக்காட்சி ஒத்திவைப்பு அனைத்து பொங்கல் விழாக்களும் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.  அதேபோல் மக்கள் அனைவரும் அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அதேபோல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment