லியோ படத்திலிருந்து லீக்கான காட்சிகள் .! படக்குழுவினர் போட்ட கண்டிஷன் …

leo
leo

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தற்போது காஷ்மீரில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் உருவான மாஸ்டர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்ச்சனத்தில் பெற்று வந்தது இருந்தாலும் வசூல் ரீதியாக அமோக வரவேற்ப்பை பெற்றது இதனை தொடர்ந்து லியோ படம் எப்படியாவது வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று லோகேஷ் கனகராஜ் விஜய் அவர்கள் மிக தீவிரமாக இருக்கிறார்கள்.

மேலும் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் திரிஷா அவர்கள் நடிக்க இருக்கிறார் என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்று இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து தற்போது லியோ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து இருக்கின்றனர் இதனால் ரசிகர்கள் அவர்களுடைய கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படத்திற்க்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது என்று சொல்லலாம்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் லியோ திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருந்தது இதனை தொடர்ந்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் லோகேஷ் இருக்கும் ஒரு புகைப்படத்தை லோகேஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகை திரிஷா அவர்கள் லியோ படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது காதலர் தினமான நேற்று தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் லியோ திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி லீக் ஆகி இருந்தது. இதனால் படகுழு மிகவும் அதிர்ச்சியாக இருந்தனர்.

இதனால் தற்போது பட குழுவினர் ஒரு கண்டிஷனை போட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது அதாவது படப்பிடிப்பு தளத்திற்கு கேமராவோ அல்லது செல்போனையோ யாரும் வெளி ஆட்கள் எடுத்து வரக்கூடாது அது மட்டுமல்லாமல் புதிதாக படத்தில் நடிக்க வந்தாலும் அவர்களை முழுமையாக பரிசோதனை செய்த பிறகு தான் படப்பிடிப்பு தளத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் பாதுகாவலர்களையும் அதிகப்படுத்தி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் திருட்டுத்தனமாக வீடியோவை எடுத்து இணையத்தில் வெளியிட்ட நபருக்கு வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.