கொரோனா வைரசால் இங்கு போவதற்கு பயமாக இருக்கிறது.! பாண்டியன் ஸ்டோர் முல்லை அதிரடி பதிவு!!

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ். சீனாவிலுள்ள ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது. இதனை தடுக்க சீன அரசாங்கமும் மற்றும் உலக சுகாதார மருத்துவ குழுவும் இதற்கான மருந்தை தீவிரமாக கண்டுபிடித்து வருகின்றனர். தற்பொழுது வரை சுமார் 24 நாடுகளில் பரவி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்பொழுது கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கி உள்ளதாக சில செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சீனா மற்றும் உலக நாடுகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் மூவாயிரத்துக்கும் மேல் தாண்டி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது இதனையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மேலும் தற்போது இரண்டு பேருக்கு வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து பாண்டியன் ஸ்டோர்  சீரியல் நடிகை முல்லை அவர்கள் சமூக வலைத்தளத்தில் தனது பதிவு ஒன்றை தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஜோடிகள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் பிடித்தமான ஜோடிகள் கதிர், முல்லை ஜோடிதான் ரசிகர்களுக்கும் மற்றும் மக்களுக்கு பிடித்தமான ஜோடியாக இருந்து வருகிறது. சித்ரா அவர்கள் தற்போது அன்பு மழையில் நனைந்து வருகிறார் என்று கூறவேண்டும் அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் என்றே கூற வேண்டும்.

சித்ரா அவர்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சித்ராவிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். நீங்கள் இதுவரை சென்ற பயணிகள் மிகவும் சிறப்பாக ரொம்ப சுவாரஸ்யமான பயணம் எது என்று கேட்டார். பதில் கூறிய சித்ரா அவர்கள் ஜப்பான் என்று பதிலளித்தார். ஆனால் தற்பொழுது கொரோனா வைரஸ் பரவி உள்ளதால் இப்போது போக பயமாக இருக்கிறது என பதிவிட்டார்.chitra

Leave a Comment