விவேக் வீடியோவை வெளியிட்டு கண்கலங்க வைத்த சதீஷ்.!

வெள்ளித்திரையில் தனது காமெடி திறமையால் ரசிகர்களை வியக்க வைத்து வந்தவர் தான் விவேக் இவர் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் மேலும் விவேக் சமூக அக்கறை கொண்ட பல கருத்துகளை கூறும் நடிகர் என்று கூட கூறலாம் இவ்வாறு ரசிகர்களிடையே பிரபலம் அடைந்த விவேக் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தையும் வென்றார்.

விவேக் மறைந்த அப்துல்கலாம் அவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் அப்துல்கலாம் கூறிய பொன்மொழிகளை வைத்துக்கொண்டு விவேக் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற ஆசையை வைத்திருந்தார் ஆனால் அவரது ஆசை நிறைவேறாமல் 33 லட்சம் மரக்கன்றுகளை மட்டுமே நட்டு வைத்து உள்ளார்.

தற்பொழுது அவரது ஆசையை நிறைவேற்றும் படியாக சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் மரக்கன்றுகளை நட்டு வைத்து எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள் அதேபோல் ரசிகர்களும் மரக்கன்றுகளை நட்டு வைத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விவேக்கை மறக்க முடியாமல் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் அவருடன் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்கள் இந்நிலையில் நடிகர் சதீஷும் விவேக் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது எடுத்த வீடியோ காணொளியை தற்போது பகிர்ந்துள்ளார்.

அதில் தங்களை சந்திக்கும் போதெல்லாம் இந்த வீடியோவை பார்த்து சிரிப்போம் முதல் முறையாக அழுகையுடன் மிஸ்யு விவேக் சார் என பதிவு செய்துள்ளார்.மேலும் இவர் பகிர்ந்த பதிவானது  ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment