சினிமாவில் தெரிக்கவிட்ட சத்யராஜின் 6 மாஸ் வசனங்கள்.! ஒவ்வொன்றும் வேற லெவல்

தமிழ் சினிமாவில் வில்லன் ஹீரோ குணச்சித்திரங்கள் என கோணங்களில் அடுத்து வருபவர் நடிகர் சத்யராஜ். இவர் நடிக்க வந்த புதிதில் வில்லனாக தான் நடித்தார். அதன் பிறகு ஹீரோவாகமாரி முன்னிலையில் வந்தார். பின்னர் புதுமுக ஹீரோக்கள் முன்னிலையில் வரும் போது பழைய ஹீரோக்களின் நிலைமை குறைந்தது. அதன் பிறகு தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நமது  சத்யராஜ் ஆரம்பத்தில் வில்லனாக அடித்தபோது தெறிக்கவிட்ட ஆறு வசனங்கள் என்னவென்று தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

தகடு தகடு :- கமலஹாசன் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை திரைப்படத்தில் சத்யராஜ் ஒரு வில்லனாக நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் தகடு தகடு என்று வசனத்தை அவர் பேசியிருப்பார்.  இந்த வசனம் இன்று வரையிலும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு வசனமாக இருந்து வருகிறது.

என்னம்மா கண்ணு :-  நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான மிஸ்டர் பரத் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பார் நடிகர் சத்யராஜ். இந்த படத்தில் வில்லனாக நடித்த போது நடிகர் சத்யராஜ் பேசிய என்னம்மா கண்ணு என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது.

என் கேரக்டரியை புரிஞ்சிக்க மாடறீங்க :- 24 மணி நேரம் என்ற திரைப்படத்தில் கொடூர வில்லனாக நடித்து விரட்டியவர் தான் நடிகர் சத்யராஜ் இந்த திரைப்படத்தில் பெண்களை கடத்திச் சென்று கொலை செய்யும் வில்லனாக மிரட்டி இருப்பார். அப்போது சத்யராஜ் அவர்கள் அந்த பெண்களிடம் என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க என்ற வசனம் இப்போதும் அறை பிரபலமாக இருக்கிறது.

நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ :- அமைதிப்படை என்ற திரைப்படத்தில் சத்யராஜ் அவர்கள் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார் அதில் ஒரு கதாபாத்திரத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடைபெறும் சத்யராஜ் என்ற பெயர் நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ. அமாவாசை என்ற பெயரில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் சத்யராஜ் ஒரு சில சூழ்ச்சி செய்து எம்எல்ஏவாக மாறிவிடுகிறார். அதற்குப் பிறகு தன்னுடைய பெயரையும் மாற்றி நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ என்ற வசனத்துடன் அந்த படம் முழுக்க கூறியவர் இந்த வசனமும் ரசிகர் மத்தியில் பிரபலமானது அது மட்டுமல்லாமல் இந்த வசனம் ஒரு திரைப்படமாகவே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதே படத்தில் இடம்பெற்றுள்ள மப்புமா மப்பு என்ற வசனமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மணியா அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :- அமைதிப்படை திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்த வசனமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது தான். நாகராஜா சோழன் எம்எல்ஏவாக இருக்கும் இப்போது மணிவண்ணனிடம் இந்த வசனத்தை கூறுவார்.

Leave a Comment