ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்பை தொடர்ந்து தெலுங்கில் வெளியாக போகும் சத்யராஜ் மகனின் மாயோன் திரைப்படம்..!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் என்றால் அது மயோன் திரைப்படம் தான். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சத்யராஜ் மகன்  சிபி சத்யராஜ் அவர்கள் நடித்திருப்பார்.

அதேபோல கதாநாயகி கதாபாத்திரத்தில் தன்யா ரவிச்சந்திரன் நடித்தது மட்டுமின்றி கே எஸ் ரவிக்குமார் ராதாரவி போன்ற பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்த தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்கள்.  இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் இயக்குனராக கிஷோர் பணியாற்றியது மட்டுமில்லாமல் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று கலந்து எவ்வாறு செயல்படுகிறது என்பதை ரசிகர்களின் மத்தியில்  காட்டப்பட்டுள்ளது அந்த வகையில் இந்த திரைபடத்தை குடும்பத்துடன் பார்க்கும் வகையில் நமது இயக்குனர் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது மட்டுமல்லாமல் பல்வேறு பாராட்டுகளையும் புகழையும் உண்டாக்கி கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த திரைபடத்தை தெலுங்கிலும் மிக பிரமாண்டமாக வெளியிட வேண்டுமென படக்குழுவினர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.  அந்த வகையில் இந்த திரைப்படத்தை பார்த்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் இந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என சுமார் 350 க்கு மேலான தியேட்டர்களில் வெளியிட உள்ளார்கள்.

இவ்வாறு வெளி வந்த தகவலின் படி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டுமில்லாமல் சிபி சத்யராஜ் அவர்களின் வளர்ச்சியை கண்டு பலரும் பொறாமைப்பட்டு வருகிறார்கள்.

Leave a Comment