ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கி விட்டு ஆள விடுடா சாமி என கும்பிடு போட்டு தலைதெறிக்க ஓடிய சத்யராஜ்.!

தமிழ் சினிமாவில் பலரும் நடிகர்களாக நடித்து வருவது மட்டுமல்லாமல் நமக்கு தெரியாமல் ஒரு சில நடிகர்கள் படங்களை இயக்குவதிலும்,தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர்கள் கூட நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் சத்யராஜை நாம் நடிகரும்,தயாரிப்பாளருமாக தான் பார்த்திருப்போம் ஆனால் இவர் ஒரு திரைப்படத்தை இயக்கி தோல்வியடைந்ததால் அதனைத் தொடர்ந்து எந்த திரைப்படத்தையும் இயக்குவதில் ஆர்வம் காட்டவில்லை என ஒரு தகவல் கசிந்துள்ளது.

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் வில்லாதி வில்லன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் ராதிகா,கவுண்டமணி,நக்மா, மணிவண்ணன் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள் மேலும் இந்த திரைப்படம் 1995 இல் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படும் தோல்வியை சந்தித்து விட்டதாம்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,இந்தி போன்ற மொழிகளிலும் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதாம் ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என தகவல் கசிந்துள்ளது மேலும் இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் படம் மிகப் பெரிய ஹிட்டாகி விட்டது என பொய் சொல்லி வருகிறாராம் ஆனால் அந்த இந்த திரைப்படத்தை இயக்கிய சத்யராஜ் படம் தோல்வி அடைந்துவிட்டது என கூறிவிட்டாராம்.

sathyaraj2
sathyaraj2

சத்யராஜ் இயக்கி இவரே நடித்த இந்த திரைப்படம் எதனால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை என்பதுதான் தெரியவில்லை அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் தோல்வியை கண்டு சத்யராஜ் வேறு எந்த திரைப்படத்தையும் இயக்க ஆர்வம் காட்டவில்லை அதனைத் தொடர்ந்து இவரது மகன் சிபிராஜை எப்படியாவது மிகப் பெரிய நடிகனாக மாற்றிவிட வேண்டும் என இவரது தயாரிப்பில் நடிக்க வைக்கிறாராம்.

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் எதற்காக சத்யராஜ் படம் படுதோல்வியை சந்தித்தது என்ன காரணம் எங்களுக்கு சொல்லுங்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment