சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக தனது வாரிசை அரசியலில் இறக்கி அழகு பார்க்கும் பிரபல நடிகர்..!

sathyaraj daughter latest news: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக வளம் வந்தவர்கள்தான் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் இவர்களுடைய பிரச்சனைகள் அனைத்துமே ஊருக்கே தெரிந்த விஷயம் தான். பொதுவாக சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவர்களைப் பற்றிப் பேசினால் முதலில் ஞாபகம் வருவது நமக்கு காவிரி ஆறுதான்.

ஏனெனில் காவிரி ஆற்று பிரச்சினையின் பொழுது ரஜினிகாந்த் ஒரு கன்னடர் என்பதை குத்தி காட்டும் வகையில் மேடையில் பலர் பேசி உள்ளதாக செய்திகள் வெளிவந்தன இது ஒரு பக்கமிருக்க பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்து வந்த ரஜினி மற்றும் சத்யராஜ் தற்போது வெவ்வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு இவர்கள் திரைப்படத்தில் ஒன்றிணைந்தாளும் சமீபத்தில் அரசியல் சார்ந்த பிரச்சனைகள் பொழுது இருவரும் வெவ்வேறு திசையில் தான் இருந்து வருகிறார்கள் அது மட்டுமில்லாமல் அரசியலில் குதித்த பிறகாக சத்யராஜ் ரஜினியுடைய திரைப்படத்தில் நடிப்பதை விட்டுவிட்டார்.

எப்போது ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டு தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் தன்னுடைய மகள் திவ்யா சத்யராஜை அரசியலில் இறக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. திவ்யா பிறவியிலேயே சமூக ஆர்வம் கொண்டவர் இந்நிலையில் அவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் தெரிந்த விஷயம் தான்.

சமீபத்தில் கூடகொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஊட்டச்சத்து மருந்துகளை இலவசமாக கொடுத்து பிரபலமானவர். இவர் சமீபத்தில் பிரபல கட்சி ஒன்றில் களம் இறங்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இவ்வாறு இவர் ஆளும் கட்சியுடன் கூட்டணி சேரப் போகிறாரா..? இல்லை திமுகவா..? இல்லை ரஜினியுடனா..? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

sathyaraj daughter
sathyaraj daughter

Leave a Comment