மீண்டும் மிரட்டலான கதாபாத்திரத்தில் புதிய சீரியலில் களமிறங்கும் அண்ணியார்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்ற சீரியல் தெய்வமகள். இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா.

இவர் இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.  இந்த சீரியலின் மூலம் இவரைப் பெரும்பாலும் அண்ணியார் என்று கூறினாலே பலருக்கு தெரியும்.

இந்த சீரியல் முடிந்து சில வருடங்கள் கழித்து தற்போது புதிதாக வேறு ஒரு சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம். அந்தவகையில் இவர் தற்போது நடித்து வரும் சீரியலின் பெயர் தமிழும் சரஸ்வதியும் என்று பெயரிடப்பட்டுள்ளதாம்.

அதுமட்டுமல்லாமல் தென்றல் சீரியல் நடித்திருந்த தீபக் தினகர் மற்றும் நாகஷோத்ரா நாகேஷ்  உட்பட இன்னும் பல பிரபலங்கள் இணைந்து இந்த சீரியலில் நடித்து வருகிறார்களாம்.

இந்த சீரியலை இதற்கு முன்பு தெய்வமகள், தென்றல், நாயகி போன்ற வெற்றி சீரியல்களை இயக்கிய குமரன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படத்தை ரேகா கிருஷ்ணப்பா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

reka kirushnapa 2
reka kirushnapa 2

Leave a Comment