விஜய் பாடலுக்கு நடனமாடி தளபதிக்கு வாழ்த்து கூறிய சதீஷ்,பாவனா.! வைரலாகும் வீடியோ.

0

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ஒரு தளபதி விஜய். எனவே பிறந்தநாளை அவரது ரசிகர்கள் திருவிழா போல கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம் ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் விஜய் அவர்கள் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என கூறினார்.

இருபின்னும் தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஸ்பெஷலான போஸ்டர்களை வெளியிட்டு பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடினார்கள். நேற்று விஜய் ரசிகர்கள் முதல் முன்னணி திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் வரை பலரும் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஆனால் ஒரு சில பிரபலங்கள் விஜய் மற்றும் விஜய் ரசிகர்களை கவரும் படி டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது போன்றவற்றை வெளிப்படுத்தி வாழ்த்தி வந்தனர் அந்த வகையில் காமெடி நடிகர் சதீஷும், தொகுப்பாளினி பாவனாவும் இணைந்து விஜய் அவர்களுக்கு இனிய வாழ்த்து கூறியதோடு மட்டுமல்லாமல் விஜய்யின் வெவ்வேறு பாடலுக்கு நடனம் ஆடியும் அசத்தினார்.

இவர்கள் இந்த வீடியோ காக ஐந்து பாடல்களுக்கு நடனம்  அடியதோடு மட்டுமிமல்லால் ஐந்து விதமான உடைகளையும் போட்டு நடனம் ஆடியுள்ளனர் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.