இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என்று தெரிகிறதா.! இவர்தான் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்.! அட இவரா அது என ஆச்சரியப்படும் ரசிகர்கள்

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் செந்தில், கவுண்டமணி இருந்தால்தான் மக்கள் படத்தை விரும்பிப் பார்ப்பார்கள் அந்த அளவிற்கு சினிமாவில் ஹீரோ எவ்வளவு முக்கியமோ காமெடி நடிகர்களும் மிகவும் முக்கியம். அந்த வகையில் செந்தில் கவுண்டமணி தொடர்ந்து வடிவேலு, விவேக் என  பல காமெடி நடிகர்கள் வந்து செல்கிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சதீஷ் எட்டு வருடங்களாக கிரேசி மோகன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர் தான். இந்த நிலையில் காமெடி நடிகர் சதீஷ்  தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை சமீபத்தில்தான் வெளியிட்டார். மேலும் காமெடி நடிகர் சதீஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் என்பது  பலருக்கும் தெரியாத உண்மை பல  வருடங்களுக்கு முன்பு இருவரும் இணைந்து பல குறும்படங்களை எடுத்துள்ளார்.

sathish
sathish

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பஞ்சமாக இருந்த காலகட்டத்தில் நடிகர் சதீஷ் அவர்களுக்கு மிகவும் எளிதாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தநிலையில் சதீஷ் முதன்முதலாக பெயர் சொல்லப் போகிறோம் என்ற திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார் அதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல் மான்கராத்தே என பல திரைப்படங்களில் காமெடி நடிகனாக நடித்து பிரபலமடைந்தார்.

இருந்தாலும் காமெடி நடிகர் யோகிபாபு மற்றும் சூரி அவர்களுக்கு அதிக பட வாய்ப்புகள் அமைந்து வந்தது. இந்த நிலையில் சதீஷ் தனக்கு கிடைக்கும் படத்தின் வாய்ப்புகளை சிறப்பாக நடித்து கொண்டுவருகிறார். இந்நிலையில் சதீஷ் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

அப்படி இருக்கும் வகையில் இவர் கீர்த்தி சுரேஷ் அவர்களுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிந்து என்பவருடன் 2019ஆம் ஆண்டு திருமணத்தை முடித்துக் கொண்டார் சதீஷ். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்த தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

sathish sindhu
sathish sindhu

மேலும் நடிகர் சதீஷ் சமூக வலைத்தளத்தில் தனது அப்பா அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அப்பொழுது தனது தந்தையை சதீஷ் அண்ணாந்து பார்த்து உள்ளதுபோல் அந்த புகைப்படம் இருக்கிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment