கருப்பு உடையில் ரசிகர்களை முறுக்கேற்றும் அளவிற்கு செம்ம ஸ்டைலிஷாக வெளிவந்த சசிகுமார் திரைபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

sasikumar movie first look photos: திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராக வலம் வருபவர் தான் சசிகுமார். இவர் சுந்தரபாண்டியன் நாடோடிகள் சுப்பிரமணியபுரம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ஹிட் ஆக இருந்தாலும் சமீபத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் சறுக்கல் தான்.

இந்நிலையில் பெரிய முதலீட்டு திரைப்படங்கள் நடிக்கவில்லை என்றாலும் சமீபத்தில் சின்ன சின்ன திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.  அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிக்கும் ஒரு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது வெளிவந்துள்ளது.

பொதுவாக இயக்குனர் சசிகுமார் கிராமத்து கதையம்சம் உள்ள திரை படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.  இதுவே அவருடைய மைனஸ் பாயிண்ட் எனவும் பலர் கூறி வருகிறார்கள். ஆனால் இதுவரை திரைப்பட வாய்ப்பு மட்டும் குறைந்ததே இல்லை.

தற்சமயம் திருமணம் எனும் நிக்காஹ் என்னும் திரைப்படத்தை தொடர்ந்து அனீஸ் இயக்கத்தில் அவரது திரைப் படத்தில் நடிக்க உள்ளார். தற்சமயம் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது இந்த போஸ்டரை பிரபல நடிகர் சூர்யா அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக சின்ன திரைநயன்தாரா எனப்போற்றப்படும் வாணிபோஜன் நடிக்க உள்ளாராம். மேலும் மற்றொரு கதாநாயகியாக பிந்து மாதவியும் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இவ்வாறு இவர் நடிக்கும் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு இந்த போஸ்டர் வெளிவந்தது காரணமாக அதிகரித்துவிட்டது. ஏனெனில் இந்த போஸ்டரில் சசிகுமார் மிகவும் வித்தியாசமாக இருப்பதுதான் செம்ம மாஸ்.

sasi-kumar
sasi-kumar

Leave a Comment