நண்பன் வாங்கிய கடனுக்காக ராப்பகலாக உழைக்கும் சசிகுமார்.! இது படம் இல்லீங்க நிஜம்.!

0

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார், இவர் நடிகர் மட்டுமல்லாமல் நல்ல மனிதர் என்பது அவர் நடந்து கொள்ளவும் விதங்களிலேயே தெரியும், இந்த நிலையில் தனது நண்பர் பட்ட கடனுக்காக மாடாய் உழைத்து கொண்டிருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

தமிழ் சினிமாவில் கிராமத்து வாசனையுடன் தரமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் சசிகுமார், இவர் சமீபகாலமாக ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுக்க தடுமாறி வருகிறார், இந்த நிலையில் சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர் இறந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அவர் இறக்கும் பொழுது பலகோடி ரூபாய் கடனையும் விட்டுச் சென்றுள்ளார், அந்தக் கடனுக்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளார் நடிகர் சசிகுமார், தனது நண்பனின் குடும்பம் கெட்ட பெயர் எடுத்து விடக்கூடாது என்பதற்காக முழு கடனையும் தானே அடைப்பதற்கு பொறுப்பேற்றுள்ளார்.

அதனால் தொடர்ந்து எட்டு திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார், அந்த மொத்த சம்பளத்தையும், அந்த குடும்பத்தில் கடனுக்காக கொடுத்து வருகிறார், இவர் நடிப்பில் நாடோடிகள் 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் மகன், கொம்பு வச்ச சிங்கமடா, பரமகுரு, ராஜவம்சம், நானா என பல திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார் அதுமட்டுமில்லாமல் பெயரிடப்படாத இரண்டு திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.