உண்மையான டான்ஸ் ரோஸ் யார் தெரியுமா.? இதோ அட்டகாசமான வீடியோ.!

தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்றுதான் சார்பாட்டா பரம்பரை. இத்திரைப்படத்தில் நடிகராக நடிகர் ஆர்யா அவர்கள் நடித்திருந்தார். மேலும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓ டி டி தளத்தில் கடந்த 22ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது.

இத்திரைப்படத்தில் நடிகர் ஆர்யா அவர்களுடன் இணைந்து துஷாரா விஜயன், பசுபதி,  அனுபமா குமார் என பல முக்கிய பிரபலங்கள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.  இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து பிரபலங்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி  இருந்தார்கள் அதன் காரணமாக இத்திரைப்படம் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இத்திரைப்படத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.  அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் அரசியல் கட்சியை பற்றியும் பெருமையாக கூறும் விதமாகவும் அமைந்திருந்தது.

மேலும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக இரண்டு நடிகைகளை நடிக்க வைத்து இருந்தனர். அந்த வகையில் கலையரசனின் மனைவியாக நடித்திருந்தார் சஞ்சனா நடராஜன் அவர்கள் இதற்கு முன்பாக ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்ததை  நாம் பார்த்திருப்போம்.

அதைப்போல நடிகர் ஆர்யா அவர்களுக்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் நடித்திருப்பவர் தான் துஷாரா. இவர் இத்திரைப்படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டவர்.

மேலும் டான்ஸ் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இந்த கதா பாத்திரத்தில் நடிகர் ஷபீர் நடித்திருந்தார் இவரை பலரும் பாராட்டினார்கள் இந்த நிலையில் ரோஸ் கதாபாத்திரத்திற்கு இயக்குனர் ரஞ்சித் அவர்கள் ரெஸ்பான்ஸ் ஆக எடுத்துக்கொண்டது இங்கிலாந்தை சேர்ந்த வீரர் பிரின்ஸ்  நசீம் தான் இவர் ஒரு குத்துச்சண்டை வீரர். அதன் வீடியோ இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகிறது. இவர் நடனம் ஆடிக்கொண்டு  பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறார்.

Leave a Comment

Exit mobile version