வருங்காலத்தில் ஆட்டோ ஓட்டுவானா.? டீ போடுவானா.? பல வருடங்களுக்கு முன்பு ஆவேசமாக பேசிய ரங்கன் வாத்தியார்.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா

0

சினிமாவில் கால் தடம் பதிப்பதற்கு முன்பு நடிகர் பசுபதி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் பசுபதி மிகவும் ஆவேசமாக பேசுகிறார். நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடர்ந்து திரையுலகில் ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் பசுபதி. இவர் ஆரம்ப காலத்தில் கூத்துப்பட்டறையில் தான் தனது திறமையை நிரூபித்தார்.

இவரின் நடிப்பு திறமையை பார்த்து பல நடிகர்கள் வியந்தார்கள் அதுமட்டுமில்லாமல் நடிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் இவருக்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தந்தார்கள். கிடைத்த வாய்ப்பை தவற விட்டால் நாம்  சினிமாவில் காணாமல் போய்விடுவோம் என்று கருத்தில் கொண்டு எந்த வாய்ப்பு கொடுத்தாலும் அதனை சரியாக பயன்படுத்தி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருகிறார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படத்தில் ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரைப் பற்றி நெட்டிசன்கள் பல மீம்ஸ் போட்டு கலாய்த்தார்கள் அந்த அளவு ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

இந்தநிலையில் பசுபதி பல வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் அவர் பேசியதாவது  10-15 வருஷமா சினிமா துறையில் இருக்கிறவங்க எல்லாரும் கமர்சியல் நடிகர் வாங்கும் சம்பளத்தை வாங்குவது கிடையாது அவர்களுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்றே தெரியாது. இது போல் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இது போல் எனக்கும் பயமாக இருந்தது என்னைப்போல் பலரும் பயந்தார்கள். சினிமா துறையில் நுழையும் பொழுது எப்படி இருப்போம் ரிக்ஷா ஓட்டுவான  டீ போடுவானா என்று யாருக்குமே தெரியாது ஆனால் எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது என்னால் சினிமா துறையில் சாதிக்க முடியும் என்று ஆவேசமாக பேசிய வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

பசுபதி அன்று பேசியது இன்று சினிமா துறையில் வளர்ந்துள்ளார் என்பதை நிரூபித்துள்ளார்