முதல் பாதி படம் வெறித்தனம் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை விமர்சனம்.!

0

இந்தக் கொரோனா  காலகட்டத்தில் சினிமா தொழிலே முடங்கிக் கிடக்கிறது என்று தான் கூற வேண்டும் அந்த அளவு சினிமாத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது ஏனென்றால் எந்த ஒரு சூட்டிங் படப்பிடிப்பு நிகழ்ச்சி என எதுவும் நடக்காமல் இருந்து வந்தது. அதுமட்டுமில்லாமல் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபகாலமாக திரையரங்கில் திரைப்படங்கள் வெளியிடாமல் இணையதளமான அமேசன் பிரைம்  மூலம் புதிய படங்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்தவகையில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படத்தில் ஆர்யா பாக்சிங் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் கொக்கின், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த டிரைலரை நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது டிரைலர் பல சினிமா பிரபலங்களும் ஆர்யாவின் அர்ப்பணிப்பை பாராட்டித் தள்ளினார்கள்.

aarya
aarya

இந்தத் திரைப்படத்திற்காக ஆர்யா கடுமையாக உழைத்துள்ளார் என்பது ட்ரெய்லரிலேயே தெரிந்தது. பாக்சிங் லுக்கிங்கிற்காக தனது உடலை கடுமையாக வருத்து எடுத்து உள்ளார். இந்த நிலையில் படத்தைப் பார்த்த பல ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள் இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கண்டு களித்து வருகிறார்கள். முதல்பாதி முடிவடைந்த நிலையில் ஒரு சில ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வந்துள்ளார்கள். அதில் ஒரு ரசிகர் முதல் பாதி வெறித்தனம் மேக்ஸ் என பதிவிட்டுள்ளார்.

aarya
aarya

மேலும் மற்றொரு ரசிகர் இந்த திரைப்படம் உலகையே வியக்க வைக்கும் எனவும் கூறியுள்ளார் அதேபோல் யூடியூப் பிரபலமான பிரசாந்த் ரங்கசாமி அவர்கள் ஆரியாவுக்குள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது உலகளவில் பார்வையாளர்களை திகைக்க வைக்கும் என பதிவிட்டுள்ளார்.

aarya
aarya

மேலும் யூடியூப் பிரபலம் பிரசாந்த் பாதி படம் முடிந்துவிட்டது என் கண்ணில் கண்ணீர் வழிகிறது இந்த கை தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் வகையில் செய்துள்ளார்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஆர்யா பிரில்லியன்ட் பர்பாமன்ஸ் லவிங் இட் என பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் மற்றொரு ரசிகன் இந்த திரைப்படம் பக்கா தியேட்டர் மெட்டீரியல் என பதிவிட்டுள்ளார்.

aarya
aarya

மேலும் சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு பெரும் பக்கபலமாக அமைந்து உள்ளது எனவும் இசை வேற லெவல் இருப்பதாகவும் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியும் மெய்சிலிர்க்க வைக்கிறது எனவும் பதிவிட்டுள்ளார்.

aarya
aarya