பீஸ்ட் பட பாடலுக்கு செம ஆட்டம் போட்ட சார்பட்டா பரம்பரை மாரியம்மாள்.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமான இயக்குனர் என்றால் அவர்களில் ஒருவர் பா ரஞ்சித் இருப்பார். இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை நிலை நாட்டியது.

இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன்  நடித்திருப்பார். இவர் இந்த திரைப்படத்தில் மாரியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் குத்து நடனத்திற்காகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த நிலையில் இவர் பீஸ்ட் திரைப்படத்தின் பாடலான அரபி குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார். இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடலாக அரபி குத்து பாடல் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியிடப்பட்டது.

இந்த பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி வைரலானது அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை ரசிகர்கள்  முதல் பிரபலங்கள்வரை பலரும் ரீல் வீடியோ செய்து வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் ஷிவானி நாராயணன் பூஜா ஹெக்டே மணிமேகலை என பலரும் வீடியோவை வெளியிட்டு வந்தார்கள்.

அந்தவகையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Leave a Comment