சார்பட்டா படத்தில் டாடி-யாக நடித்த ஜான் விஜய் இந்த திமுக பிரபலத்தின் மருமகனா.! அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.

தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான கதைக்களத்தை கொடுத்து வருபவர் இயக்குனர் ரஞ்சித் இவர் இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் தற்போது ஆர்யாவை வைத்து சார்பட்டா திரைப்படத்தை இயக்கி முடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக OTT இணையதளமான அமேசான் ப்ரைம் இல் வெளியானது.

திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது இந்த திரைப்படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சன நடராஜன், கலையரசன், ஜான் சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், ஷபீர் கல்லராகள் மாறன் என பலரும் நடித்திருந்தார்கள். மேலும் இந்த திரைப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் குத்து சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஆர்யா கதாபாத்திரம் மற்றும் பலரின் கதாபாத்திரமும் மிகவும் சிறப்பாக அமைந்தது. அதிலும் குத்துசண்டை வீரராக வந்த டான்சிங் ரோசாக சபீர், டாடி ஆக வந்த ஜான் விஜய், ரங்கனாக வந்த பசுபதி ஆகியோர்களின் கதாபாத்திரம் ரசிக்கும்படி அமைந்தது. இந்த நிலையில்தான் ஜான் விஜய் சரத்குமார் நடிப்பில் வெளியாகிய தலைமகன் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார் அதன் பிறகு தனது இரண்டாவது திரைப்படம் ஆர்யாவுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது  ஆர்யாவுடன் ஓரம்போ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் 15 வருடங்களுக்கு பிறகு ஆர்யாவுடன் சார்பட்டா திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் அங்காடித்தெரு தில்லாலங்கடி மௌனகுரு கலகலப்பு என தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சார் பட்டா திரைப்படம் திமுகவிற்கு ஆதரவாக பல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ஜான் விஜய்  அவர்களுக்கும் திமுகவிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

ஜான் விஜய் மாதவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் மாதவி வேறு யாரும் கிடையாது திமுக செய்தி தொடர்பு செயலாளரும் எம்பியுமான டி கே எஸ் இளங்கோவன் மருமகன் தான் என்பது தற்ப்பொழுது தெரியவந்துள்ளது.

Leave a Comment