சார்பட்டா பரம்பரை படத்தில் குக் வித் கோமாளி பிரபலம்!! அட இத கவனிக்காம விட்டுடோமே…

sarpatta parambharai
sarpatta parambharai

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ஆர்யா நடிப்பில் வெளிவரும் ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் முக்கியமாக இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமோக வெற்றியைப் பெற்றது.

அதோட இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்கள் இத்திரைப்படத்தினை பார்த்து தற்பொழுது வரையிலும் கொண்டாடி வருகிறார்கள். அந்தவகையில் இத்திரைப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதாவது ஆர்யா கேரக்டர் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்ததோ அதேபோல ஹீரோயினாக நடித்திருந்த துசாரா விஜயன், வில்லனாக நடித்திருந்த வேம்புலி கதாபாத்திரம், டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சபீர், டாடி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜான் விஜய், பசுபதி கதாபத்திரத்தில் நடித்திருந்த ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் உள்ளிட்ட இன்னும் ஏராளமான கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சில காலங்களாகவே சொல்லுமளவிற்கு ரசிகர்கள் மனதை என்ற திரைப்படமும் கவரவில்லை ஆனால் சார்பட்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுதுள்ளது லாக் டவுனில் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது. எனவே இந்த திரைப்படத்தினை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தில் விஜய் டிவி புகழ் ஒருவர் நடித்துள்ளார் இதனை கடைசி வரையும் யாரும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தற்பொழுது அந்த கதாபாத்திரத்தை பற்றி தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது போட்டி வர்ணனையாளராக சென்னை தமிழில் பேசிய வசனங்கள் அந்த சண்டைக் காட்சிகளுக்கு ஏற்றாற்போல் அமைந்திருந்தது.

thangathurai
thangathurai

அந்த வசனங்களும் ஹைலைட்டாக இருந்தது. அந்த வசனத்தை பேசியது வேறு யாருமில்லை விஜய் டிவி புகழ் பழைய ஜோக் தங்கதுரை தான். இவர் ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.ஆனால் சார்பட்டா திரைப்படத்தில் இவரின் தனித்துவமான சென்னை பேச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.