சரோஜா படத்தில் கோடான கோடி பாடலுக்கு நடனமாடிய நடிகையா இது.! அப்பவே அப்படி இருந்தாங்க இப்போ சொல்லவா வேணும்

தமிழ் திரை உலகில் நன்றாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் நடிகைகள் பலரும் தற்போது காணாமல் போய்விடுகிறார்கள் ஏனென்றால் அவர்களுக்கு நன்றாக நடித்து வரும் பொழுது அதிக பட வாய்ப்பு கிடைக்கிறது மேலும் படம் வாய்ப்பு கிடைக்காத நிலையில்  திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் கடந்த 2008ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா,பிரேம்ஜி,வைபவ் போன்றவர்கள் நடிப்பில் வெளியான சரோஜா படத்தில் இடம்பெற்ற சூடான கோழி என்ற பாடலுக்கு மிகவும் நடனமாடி ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்தவர் தான் நிகிதா.

இவர் அந்த பாடலில் புடவையில் நடனம் ஆடி ரசிகர்களை மயக்கினார் மேலும் நிகிதா இந்தி தொலைக்காட்சியில் ஒன்றில் வெளியான சீரியல் தொடர் மூலம் சின்னத்திரைக்கு நுழைந்தார் அதன் பின்பு கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ஹாய் என்ற தெலுங்கு திரைப் படத்தில் நடித்திருப்பார்.

அதனைத் தொடர்ந்து இவர் நன்றாக நடிக்கிறார் என்பதை பார்த்துவிட்டு தமிழ் சினிமாவில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது இவர் தமிழில் குறும்பு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சரத்குமார் சிபிராஜ் போன்ற பல நடிகர்களின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அதன் பின்பு எந்த ஒரு தமிழில் பட வாய்ப்பு கிடைக்காத நிலையில் இவர் கன்னட மொழி திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார் கன்னடத்தில் இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

இந்நிலையில் நிகிதா கன்னட திரைப்படங்களில் நடித்து வரும் பொழுது பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது  திருமண வாழ்க்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ககன்தீப் சிங் என்பவரை மணமுடித்துக் கொண்டார் இவரது திருமணத்தின் பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

nikitha
nikitha

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகலுடன் இருக்கும் பொழுது எடுத்த ஒரு சில புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் மேலும் இந்த புகைப்படங்களை நிகிதாவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என பலரும் கேட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment