நடிகை நிகிதா 2002 ஆம் ஆண்டில் ஹிந்தி தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார். இவர் மும்பையில் பிறந்தவர் அந்த நடிகை மற்றும் மாடல் ஆவார் தமிழ் திரை உலகில் 2003 ஆம் ஆண்டு வெளியான குறும்பு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பிறகு தமிழில் 2013ம் ஆண்டு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி அனுஷ்கா சந்தானம் நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் சந்தானத்தின் தங்கையாக காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நிகிதா. தமிழில் சில திரைப்படங்களில் நாயகியாக நடித்து வந்தார் ஆனால் ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால் ஐட்டம் பாடல்கள், கிராமர் கதாபாத்திரங்கள் என தென்னிந்திய திரை உலகில் கிளாமர் நடிகையாக வலம் வந்தார், தொடர்ந்து அவருக்கு கிளாமர் நடனம் ஆடும் வாய்ப்புகளே அதிகமாக வந்தது. “சரோஜா” படத்தில் “கோடான கோடி” பாடல் முதல் “பாயும் புலி” படத்தில் வரும் “நான் சூடான மோகினி” பாடல் வரை தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் பல படங்களில் கிளாமர் நடனம் ஆடி அசத்தியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு கரன் தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார், தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இப்பொழுது நடிகை நிகிதா தனது குடும்ப நண்பர்கள் என குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பட வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன் என முடிவுடன் இருக்கிறார் இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்.
