சர்கார் 2 பாகமா அல்லது துப்பாக்கி 2 பாகமா முருகதாஸ் அதிரடி பதில்.!

0
sarkar 2
sarkar 2

தமிழ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போது திகில் படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார், விஜய் இதற்கு முன் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் அரசியல் அவலங்களை வெளிகாட்டியது.

அதனால் இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது, படம் வெளியாகி பல சிக்கல்கள் ஏற்பட்டாலும் அனைத்து சிக்கலையும் உடைத்தெறிந்து திரையரங்கிற்கு வந்து தமிழகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது, இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என பிரபல வார இதழின் மூலம் ரசிகர்கள் முருகதாஸிடம் கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு முருகதாஸ் பதிலளித்துள்ளார், சர்கார் இரண்டாவது பாகம் உருவாகும் நிலையை இந்த சர்கார் உருவாக்கி விடக்கூடாது எனக் கூறினார். அதாவது இந்த அரசியல் சர்கார் இரண்டாம் பாகத்தை எடுப்பது உருவாக்கி விடக் கூடாது என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது துப்பாக்கி இரண்டாம் பாகம் எடுப்பதற்கு விருப்பம் இருப்பதாகவும் விரைவில் இரண்டாம் பாகம் உருவாகும் கூறியுள்ளார்.