பரிபோன உயிர்.. தனது கணவரின் மறைவு குறித்து உண்மையை சொன்ன சரிகமப பவித்ரா…

ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டு வந்த சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பவித்ரா தன்னுடைய கணவரின் இறப்பு எப்படி நடந்தது அதன் பிறகு நடந்த சம்பவங்கள் என பல விஷயங்களை உருக்கமாக பேசி உள்ளார்.

பொதுவாக நிகழ்ச்சியில் பலரும் தங்களுடைய சொந்தக்கதையும் சோகக்கதையும் கூறுவார்கள் அந்த வகையில் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த பவித்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.

சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு காரணம் தன்னுடைய கணவர் எனக் கூறியுள்ளார். தன்னுடைய கணவர் நீ ஒரு பாடகியாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பாராம் அந்த ஆசையை தற்போது இவர் நிறைவேற்றி உள்ளாராம்.

அதேபோல் பவித்ரா கூறியதாவது தன்னுடைய கணவர் தன் பெயரை அழைத்து கூப்பிட்டதே கிடையாதாம் தெய்வம் என்று தான் கூறுவாராம் அதேபோல் வாங்க, போங்க என பேசுவாராம் நான் கூட நிறைய டைம் கிண்டல் பண்ணி இருக்கிறேன் ஆனால் அவர் எப்பொழுதுமே தெய்வம் தெய்வம் என்று சொல்லி இப்பொழுது அவர் தெய்வமாகிவிட்டார் என பவித்ரா கூறும்போதே கண்ணீரில் நீர் வழிந்தது.

அவருக்கு ஆக்சிடெண்ட் ஆனதும் என்னுடைய தம்பிக்கு போன் வந்தது அங்கு உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் பொழுது நான்தான் அவருடைய மனைவி என்று தெரியாமல் ஒருநாளும் வந்து பவித்ரா என்பது யாரு அவங்க அம்மாவா என கேட்டார் இல்லை அவருடைய மனைவி என அங்கு இருந்தவர்கள் கூறினார்கள் அதற்கு அவர் உடம்பில் 17 இடத்தில் பவித்ரா என பெயரை பச்சை குத்தி வைத்திருக்கிறார் என கூறியுள்ளார்கள்.

அவர் இறந்துவிட்ட பொழுது அவரை நான் தொட்டுக் கூட பார்க்கவில்லை அதை இப்பொழுது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று கண்ணீருடன் பவித்ரா பேசியுள்ளார்.