ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சர்தார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ரன்னிங் டைம் அறிவிப்பு.!

sardar
sardar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சர்தார் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி  மற்றும் ரன்னிங் டைம் பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது இந்த நிலையில் சர்தார் படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் தேதியை வெளியிட்டுள்ளனர்.

ஆம் சர்தார் திரைப்படம் அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி அன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதே தேதியில் சிவகார்த்திகேயனின் பிரண்ட்ஸ் திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இந்த இரண்டு படங்களும் ஒன்றுடன் ஒன்று சளைத்தது கிடையாது என கார்த்திக் ரசிகர்களும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

கார்த்தி அவர்கள் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தய தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் புத்தகத்திலும் சரி கதையிலும் சரி வந்தே தேவன் கதாபாத்திரம் ஒரு முக்கிய கதாபாத்திரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் வந்தவனாக கார்த்தி நடித்து ஒட்டு மொத்த மக்கள் மத்தியிலும் நீங்க இடம் பிடித்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள சர்தார் படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது.மேலும் இந்த படத்தில் நடிகர் கார்த்தி பாடிய ஏறுமயிலேறி என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதனால் சர்தார் பட குழுவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.