பிக்பாஸ் வீட்டில் இனி சரவெடி தான்.. வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்த சஞ்சீவ்.. விஜய் சார் பிக் பாஸ் பார்க்கிறாரா.? சஞ்சீவ் சொல்ல வருவது என்ன.?

big-boss
big-boss

பிக்பாஸ் 5வது கட்ட சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது 50 நாட்களை தாண்டி நிலையில் பல்வேறு பிரபலங்கள் வெளியேறினார் கடைசியாக இசைவாணி வெளியேறினார் அவரைத் தொடர்ந்து புதுமுக பிரபலங்கள் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டில் கால் தடம் பதித்துள்ளனர்.

அமீர் இரண்டு நாள்களுக்கு முன்பு வந்தார் அவரைத் தொடர்ந்து வைல்ட் கார்டு மூலம் தளபதி விஜயின் நண்பரும், நடிகருமான சஞ்சீவ் தற்பொழுது இன்று அடியெடுத்து வைத்துள்ளார். அமீரை போல் சஞ்சீவ் இல்லாமல் வெளியில் இவர்களைப் பற்றிய மன நிலைமையை சரியாக புரிந்து வைத்துக் கொண்டு உள்ளே வந்தவுடன் ஒவ்வொருவரைப் பற்றியும் சரியாக சொல்லி வருகிறார்.

மேலும் இவர் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் உள்ளே வந்தவுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த சிபி சஞ்சீவை பார்த்து தளபதி விஜய் சார் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறார்களா என கேட்க அதற்கு அவர் பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்தார்.

இருப்பினும் விஜய் சார் தனக்கு பிடித்தவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார் பார்ப்பார் என ஏற்கனவே சொல்லியிருந்தார் அதற்கேற்றார் போல் தற்போது அவரது நண்பர்கள் அமைந்து உள்ளதால் நிச்சயம் விஜய் சார் பார்ப்பார் என தெரியவருகிறது. இனி பிக் பாஸ் வீட்டில் ஒரு சரவெடி இருக்கும் என்பது நல்ல தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

ஏனென்றால் சஞ்சீவ் உடனே பதிலுக்கு பதில் பேசும் பழக்கம் கொண்டவர் அதனால் அவரது கை பொறுமையை இழந்து நிற்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இனி பிக்பாஸ் வேற லெவலில் இருக்கும் எனக்கூறி சந்தோஷம் அடைந்து வருகின்றனர் ரசிகர்கள்.