சரவணபவன் ராஜகோபால் உடல்நல குறைவால் காலமானார்.!

0
rajagopal
rajagopal

சரவணபவன் ராஜகோபால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இன்று மீண்டும் உடல்நலக்குறைவால் காலமானார்.

சரவணபவன் ராஜகோபால் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சில குற்றவாளிகளில் ஒருவராக சிக்கினார், குற்றம் நிரூபிக்கப்பட்டதாள் அவருக்கு ஆயுள் தண்டனை உச்ச நீதிமன்றம் வழங்கியது, ஆனால் ராஜகோபால் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சரணடைய சிறிது கால அவகாசம் வேண்டும் என மனு தாக்கல் செய்த அந்த வழக்கை ஜூலை 9ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அன்றைய தினமே தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் ராஜகோபால் வரவழைக்கப்பட்டு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரை சிறையில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது பின்பு ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகலுக்கு உள்ள பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார், மேலும்  ராஜகோபால் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவரது மகன் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி அவசர மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி வழங்கியது சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.