மலரே மௌனமா.. என்ற பாடலுக்கு இருட்டில் மின்மினி பூச்சி போல் மிளிரும் சரவணன் மீனாட்சி ரட்சிதா.! ட்ரெண்டாகும் வீடியோ

பெங்களூரை சேர்ந்தவர் நடிகை ரட்சிதா இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழிகளும் பேசக்கூடியவர். மேலும் தினேஷ் கோபாலசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் இணைந்து பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்து இருந்தார்கள்.

பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ஜோதி கதாபாத்திரத்தில் தான் ரட்சிதா நடித்திருந்தார் அதனை தொடர்ந்து இளவரசி என்ற சீரியலிலும் சன் தொலைக்காட்சியில் நடித்து பிரபலம் அடைந்தார். ஆனாலும் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறியது சரவணன் மீனாட்சி சீரியலில் தான் இந்த சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார்.

அதேபோல் இந்த சீரியலை ரசிகர்கள் மறக்கவே முடியாது அந்த அளவு அவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது இவர் சீரியல் மட்டும் இல்லாமல் ஜூனியர் சீனியர், ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3.0 ஆகிய நிகழ்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார் தற்போது இவர் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் இந்த சீரியலில் மகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ரட்சிதா சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் கன்னடத்தில் ஒரு திரைப்படத்திலும் உப்பு கருவாடு என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை அதனால் இவர் சீரியல் பக்கமே தனது திசை திருப்பினார்.

இப்படி மிகவும் பிஸியாக இருந்து வரும் சரவணன் மீனாட்சி ரட்சிதா சமூக வலைத்தளத்திலும் பிஸியாக இருக்க கூடியவர் தான் அடிக்கடி ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தனது கட்டுக்குள்ளேயே வைத்திருப்பார். அதேபோல் தற்பொழுது ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

மலரே மௌனமா என்ற பாடலுக்கு இரவில் மின்மினி பூச்சி போல் ஒளிரும் அழகில் க்யூட் ரியாக்சன் செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment