அம்மன் வேடத்தில் நயன்தாராவையே மிஞ்சும் சரவணன் மீனாச்சி ரச்சிதா.! புகைப்படத்தை பார்த்து வாயில் போட்டுக்கொள்ளும் ரசிகர்கள்

நடிகை நயன்தாரா மற்றும் ஆர்.கே பாலாஜி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன்.முதன் முதலில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் மிகவும் காமெடியும் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்றது.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் நயன்தாரா போலவே பிரபல சீரியல் நடிகை ஒருவர் அம்மன் வேடம் போட்டு இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் வெள்ளித்திரையில் நயன்தாரா எப்படி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாறோ அதேபோல சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரச்சிதா.

இவரின் அழகைப் பார்த்த பல ரசிகர்கள் இவர் படங்களில் நடிக்க மாட்டாரா என்று காத்து வருகிறார்கள். இந்நிலையில் இவர் தற்போது விஜய் டிவியில் நாம்  இருவர் நமக்கு இருவர் சீரியலிலும்,கலர்ஸ் தமிழில் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து இவர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான உடைகள் என்று வித்தியாசமான கெட்டப்பில் பல புகைப்படங்களை வெளியீடு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் கலர்ஸ் தமிழில் அம்மன் ஷூட்டிங்கின் போது நயன்தாரா  மூக்குத்தி அம்மன் போல ரச்சிதாவின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு அழகான அம்மனை பார்த்தது இல்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.  இதோ அந்த புகைப்படம்.

rakshita-amman-
rakshita-amman-
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment