சரியான நேரம் பார்த்து அஜித், விஜய் உடன் மோதும் சரவணன் அண்ணாச்சி.. வெளிவந்த மாஸான தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களுடைய படங்கள் விசேஷ நாட்களில் நேருக்கு நேராக மோதிக்கொள்வது வழக்கம் அந்த வகையில் கடந்த பொங்கலை முன்னிட்டு கூட அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் பலப்பரிச்சை நடத்தின ஆனால் இரண்டு திரைபடங்களுமே மக்களின் பெரும் ஆதரவை பெற்று அனைத்து இடங்களையும் நன்றாக ஓடியதோடு அதுமட்டுமல்லாமல் வசூலையும் அள்ளிக் குவித்தன.

திரையரங்குகளில் வெற்றிநடை கண்ட இந்த திரைப்படங்கள் அடுத்ததாக OTT தளத்திலும் ரிலீஸ் ஆனது. அங்கேயும்  குடும்ப மக்கள் மத்தியில் தற்பொழுது நல்ல வரவேற்பை பெற்று  கெத்து காட்டுகின்றது இந்த இரண்டு திரைப்படங்களை எதிர்த்து வேறு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை..

இந்த நிலையில்  சரவணன் அண்ணாச்சி நடித்த  தி லெஜண்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஒவ்வொரு மாதம் கழித்து OTT தளத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஆறு மாத காலம் ஆகியும்  ரிலீஸ் ஆகாமல் போனதால் OTT  வராது  என எதிர்பார்க்கப்பட்டது திடீரென     டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் இன்று தி லெஜெண்ட் சரவணன் படம் ரிலீஸ் ஆகி உள்ளது.

அஜித் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் OTT தளத்தில் போட்டி போட்டு வந்த நிலையில் மூன்றாவதாக தற்போது இவர் களம் இறங்கி உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. இதில் யார் கை ஓங்கும் என்பதை தெரிந்து கொள்ள தற்பொழுது ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

Leave a Comment