ஆக்ஷன் காட்சிகளில் செதரவிடும் லெஜென்ட் அண்ணாச்சி.! வைரலாகும் படப்பிடிப்பு புகைப்படம்.!

சரவணா ஸ்டோர் கடையின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் புகழ் பெற்ற தொழில் அதிபராக விளங்கி வருகிறார். தன்னுடைய கடை விளம்பரங்களில் தானே நடித்து அதில் வெற்றியும் கண்டவர்.

பல நடிகர்கள் இந்த நடிகையுடன் நடிக்க வேண்டும் அந்த நடிகையுடன் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள் ஆனால் தி லெஜெண்ட் சரவணன் பல நடிகைகளுடன் தன்னுடைய கடை விளம்பரங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது படத்தில் நடிக்கும் ஆசை வந்துவிட்டது. அதனால் தனது முதல் திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறார் இதில் தானே ஹீரோவாகவும் அறிமுகமாகியிருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை உல்லாசம், விசில் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஜேடி-ஜெர்ரி இயக்க இருக்கிறார்.

legend

இதெல்லாம் ஒருபுறமிருக்க படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அந்த படப்பிடிப்பில் இருந்து ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன்  ஹீரோ போல் மாஸ் காட்டுகிறார்.

legend

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்து வருகிறார் மேலும் படத்தில் கீதிகா திவாரி,  பிரபு,  ரோபோ சங்கர்,  விஜயகுமார்,  நாசார், தம்பி ராமையா,  மயில்சாமி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படம் படப்பிடிப்பு முடிந்தவுடன் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்றால் இவர் விளம்பரங்களில் நடித்ததை ரசிகர்கள் கலாயத்து வந்தார்கள் இந்த நிலையில் படம் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

legend

Leave a Comment

Exit mobile version