பூஜையுடன் தொடங்கியது சரவணாஸ்டோர் அண்ணாச்சியின் படம்.! நடிகை யார் தெரியுமா.?

0

தமிழகத்தில் சரவணா ஸ்டோர் கடைகள் இல்லாத இடமே இல்லை, ஜவுளி முதல் நகைகள் வரை வீட்டுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கும், சரவணா ஸ்டோர் கடையின் குட்டி முதலாளி அருள் தனது கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலமானவர். இவர் இப்படி தொடர்ச்சியாக தனது கடை விளம்பரங்களில் நடித்த பொழுது எதார்த்தமாக அவரிடம் சினிமாவில் நடிப்பீர்களா என கேட்கப்பட்டது அப்போது அவர் சீரியஸாக எடுத்துக் கொண்டு சினிமாவில் நடித்தால் ஹீரோதான் என்று களமிறங்கி விட்டார்.

மேலும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிக்கயிருக்கும் திரைப்படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி தான் இயக்க இருக்கிறார், அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் 30 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட்டை பார்த்து ஹோலிவுட் வட்டாரத்தில் அனைவரும் வாய் பிளக்கிறார்கள்.

saravana-store-arul
saravana-store-arul

மேலும் பலர் இது வதந்தி என கூறினார்கள் இந்த நிலையில் படத்தின் பூஜை துவங்கி அனைவரையும் வாயை அடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தின் பூஜை டிசம்பர் 1ம் தேதி போடப்பட்டுள்ளது, மேலும் படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது இந்த நிலையில் இந்திய மாடல் அழகி ஒருவரை படத்தில் கமிட் செய்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் பூஜையில் பிரபு, விவேக் ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதனால் இவர்கள் இந்த திரைப்படத்தில் இவர்கள் நடிக்கிறார்களா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்து வருகிறது, ஒரு வேலை பிரபுவை அண்ணனாக நடிக்க வைத்தாலும் வைக்கலாம் அண்ணாச்சி என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

saravana-store-arul
saravana-store-arul