மறைந்த நடிகர் விவேக் குறித்து நடிகை ஊர்வசி ரவுத்தேலா கூறிய சூப்பர் பதிவு.! இதுவரை 6 லட்சத்திற்கு அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்

சினிமா உலகில் சாதித்த பிரபலங்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் மறைந்த காமெடி நடிகர் விவேக். இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திடீரென கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தது சினிமா துறையினரையும் தாண்டி தமிழ் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவரது உடல் தகனம் செய்யப்பட்டு இருந்தாலும் அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் மற்றும் சமூக அக்கறையாளர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இவருடன் நடித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விவேக் அவர்கள் குறித்து தனது நினைவுகளை குறிப்பிட்டுள்ளார்.

விவேக் அவர்கள் கடைசியாக மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளன விஜய் சேதுபதியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர், கமலுடன் இந்தியன் 2, சரவணா ஸ்டோர் லெஜண்ட் சரவணன் அருள் நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகையாக ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார் அப்பொழுது நடிகர் விவேக் இவருக்கு எப்படி நடிக்க வேண்டும் எந்த மாதிரி டயலாக் சொல்ல வேண்டும் என்பதையெல்லாம் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விவேக் அவர்கள் குறித்து ஊர்வசி பதிவிட்டது. பத்ம ஸ்ரீ விவேக் சார், நான் உங்களை எப்போதுமே மிஸ் செய்வேன் என் முதல் தமிழ் படத்தில் உங்களைப் போன்ற ஒரு “லெஜன்ட்” உடன் பணியாற்றிய அனுபவத்தை என்னால் மறக்க முடியாது உங்களின் இறப்பு என்னை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நீங்கள் என் மீதும் உலகத்தின் மீதும் அக்கறை எடுத்துக் கொண்டீர்கள் உங்களின் நகைச்சுவை வசனங்கள் நீங்கள் மரங்கள் மீது வைத்துள்ள காதல் போன்றவற்றை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

உங்களின் அனுபவங்களை நான் பாடமாக எடுத்துக் கொள்கிறேன் அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையதளபக்கத்தில் இதுவரை ஆறு லட்சத்திற்கும் மேல் பார்த்து லைக் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment