ஹீரோவாக களமிறங்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி. பட்ஜெட் மற்றும் நடிகை யாருன்னு தெரிஞ்சா ஆடி போயிடுவீங்க

0

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அனைத்து தொலைக்காட்சிகளிலும் தனது கடைக்கான விளம்பரத்தில் கலர்கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தானே முன்னணி நடிகைகளுடன் நடித்து பிரபலமானார். இவர் சினேகா முதல் ஹன்சிகா வரை அனைத்து முன்னணி நடிகைகளுடன் தனது கடை விளம்பரத்தில் நடித்துள்ளார்.

தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு மிகவும் பிரபலமடைந்து விட்டது, ஜவுளிகள் முதல் வீட்டிற்கு தேவைப்படும் அனைத்து உபயோக பொருட்களும் சரவணா ஸ்டோரில் கிடைக்கும் வகையில் பிரமாண்டமாக அமைத்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சினிமாவில் நுழைய இருக்கிறார்.

தனது கடை விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் சமீபத்தில் தமிழ் சினிமா விழாவில் கலந்து கொண்டார் அண்ணாச்சி அப்பொழுது அவரிடம் செய்தியாளர் ஒருவர் நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என கேட்டதற்கு, நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என களம் இறங்கிவிட்டார், சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் முதல் திரைப்படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி தான் இயக்கியிருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு பட்ஜெட்டாக 30 கோடி என கூறப்பட்டுள்ளது, இவர் நடிக்கும் முதல் திரைப்படமே 30 கோடியை என கோலிவுட் வட்டாரத்தில் வாயடைத்துப் போகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவின, ஏனென்றால் ஹன்சிகா ஏற்கனவே சரவணாஸ்டோர் அண்ணாச்சி விளம்பரத்தில் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் அதனால் அந்த செய்தியை ரசிகர்கள் அனைவரும் நம்பினார்கள், உடனே ஹன்சிகாவும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி உடன் நான் நடிக்கவில்லை இது பொய்யான செய்தி என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

ஹன்சிகா அண்ணாச்சியுடன் நடிக்கவில்லை என்பது உறுதி ஆகிய நிலையில், அடுத்ததாக யார் நடிக்க இருக்கிறார் அண்ணாச்சியிடன் நடிக்க யாருமே இல்லையா என்று தேட அண்ணாச்சியின் டார்கெட் தமன்னாவாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன, ஆம் ஹன்சிகா போல தமன்னாவும் அண்ணாச்சியுடன் விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, அதனால் தமன்னாவை எப்படியாவது அண்ணாச்சி உடன் ஜோடி சேர சம்மதம் வாங்கிவிடவேண்டும் என்று படக்குழு தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை தமன்னாவும் இதுகுறித்து எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார், எனவே தமன்னா இந்த திரைப்படத்தில் நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒருபுறமிருக்க அண்ணாச்சி நடிக்கும் புதிய திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் வேலைதேடி படக்குழு அலைந்து கொண்டிருக்கிறார்கள். படத்தின் வேலைகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.