66 வயதில் காட்டுத்தனமாக உடம்பை முருக்கேற்றிய சரத்குமார்.. பிரபல முன்னணி நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க ரெடியாகிறாரா…

80 ,90 காலகட்டங்களில் சினிமா ஆரம்பத்தில் வில்லனாக நடித்த பெரும்பாலானோர் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருகின்றனர் அப்படி சத்யராஜ் வில்லனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக மாறினார். அதுபோல ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லனாக iஅறிமுகமாகி பின் ஹீரோவாக அடியெடுத்து வைத்தார்.

அதுபோல சரத்குமாரும் வில்லனாக இருந்து பின்னாட்களில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

ஆள் பார்ப்பதற்கு நல்ல வாட்டசாட்டமாக இருந்ததால் முதலில் வில்லத்தனமான ரோல் கொடுக்கப்பட்டு பின் தனது நடிப்பின் மூலம் ஹீரோ என்ற பெயரை சம்பாதித்து அடுத்தடுத்த தொடர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் நிரந்தர ஹீரோவாக மாறினார் சரத்குமார்.

தற்பொழுது சினிமா/ அரசியல் என ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சரத்குமார் ஒரு புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதற்காக 66 வயதிலும் உடம்பை கரடுமுரடாக ஏற்றிய  புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள சூர்யாவின் 40வது திரைப்படத்தில் தான் சரத்குமார் அதிரடி வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் எழுந்த வண்ணம் உள்ளன.

ஆனால் இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இதனால் சரத்குமார் வில்லன் ரோலில் பார்க்க பலரும் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.

sarathkumar
sarathkumar
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment