கோலி பாண்ட்யா மட்டும் ரன்களை உயர்த்தினார்களா.! தோனியை விமர்சித்தவர்களுக்கு பிரபல நடிகர் சரியான பதிலடி

0

உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியும் இந்திய அணியும் நேற்று மோதிக்கொண்டன இதில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 337 ரன்கள் எடுத்திருந்தது 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 306 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது அதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்த தோல்விக்கு தோனி மற்றும் கேதர் ஜாதவ் தான் காரணம் என பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள், அதுமட்டுமில்லாமல் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஜாம்பவான்களும் கடுமையாக தோனியை தாக்கி பேசினார்கள், இதற்கு அரசியல் தலைவரும் நடிகருமான சரத்குமார் தக்க பதிலடி கொடுத்து ட்வீட் போட்டுள்ளார் இதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தோனியை பற்றி விமர்சித்த பலருக்கு சரத் குமார் கூறியதாவது தோனியின் ஆட்டத்தைப் பற்றி பலரும் விமர்சிப்பது எனக்கு புரியவில்லை, தோனி மந்தமான விளையாட்டை வெளிப்படுத்தினார் என்றால் கோலி மற்றும் பாண்ட்யா பவுண்டரிகளை அடித்து ரன்களை ஏற்றினார்கள், ஆனால் ஏன் அவர்களால் ரன் ரேட்டை அதிக படுத்த முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்பொழுது இருப்பது சிறப்பான அணி இவர்களை விமர்சனம் செய்யக்கூடாது ஆதரிக்க வேண்டும் என தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார், இந்த கருத்திற்கு பல ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள்.